
பழிவாங்கினார்? - ரவி, விஷ்ணுகாந்தை தொடர்ந்து ஹரீஷ் மீதும் சம்யுக்தா குற்றச்சாட்டு
ஜூன் 03, 2023
Advertisement
சின்னத்திரை நடிகை சம்யுக்தா தனக்கு எதிராக குரல் எழுப்பும் ஆண்கள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். முன்னதாக ரவி தன்னை அப்யூஸ் செய்ததாகவும், விஷ்ணுகாந் திருமணத்திற்கு பிறகு தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகவும் புகார் கூறியிருந்தார். இதற்கிடையில், ஹரீஷ் என்ற இயக்குநருடன் சம்யுக்தா பேசிய ஆடியோ வெளியாகி சம்யுக்தாவின் பொய்களை அம்பலபடுத்தியது. அந்த ஆடியோ குறித்து தற்போது விளக்கமளித்துள்ள சம்யுக்தா, "நிறைமாத நிலவே வெப்சீரியஸுக்காக எனக்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. ஆனால், இயக்குநருக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. அந்த பொறாமையால் என் மீதும் ரவி மீதும் கோபத்திலிருந்தார். எனவே தான் அந்த ஆடியோவை விஷ்ணுகாந்துக்கு அனுப்பி என்னையும், ரவியையும் கேவலப்படுத்தி பழிவாங்கிவிட்டார்" என்று கூறியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!