எம்ஜிஆர் டைட்டிலில் சமந்தா
ஜூன் 12, 2026
Advertisement
சமந்தாவும், அவரது 2வது கணவரும் இணைந்து தயாரிக்க, நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் "மா இண்டி பங்காரம்". படத்தின் தமிழ் பதிப்பிற்கு "எங்கள் தங்கம்" டைட்டில் வைத்துள்ளனர். இது 1970ம் ஆண்டு வெளிவந்த எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த படத்தின் டைட்டில் ஆகும். "மா இண்டி பங்காரம்" என்ற தெலுங்கு டைட்டிலின் நேரடி பொருள்தான் "எங்கள் தங்கம்".
சமந்தா நடித்துள்ள படத்தில் திகந்த் மற்றும் குல்ஷன் தேவய்யா, ஸ்ரீமுகி, கவுதமி, ஆனந்த், லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். புகுந்த வீட்டை வாழ வைத்த பல மருமகள்களின் கதை திரைப்படமாகி உள்ளது. இதுவும் அதுபோன்ற ஒரு கதைதான். ஆனால் இந்த கதையில் வரும் மருமகள் மாமியார் வீட்டை பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றும் சூப்பர் ஆக்ஷன் மருமகளாக நடித்துள்ளார். வரும் ஜூன் 19 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!