
சாய் அபயங்கரின் 3வது 200 மில்லியன் ஆல்பம்
சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பாக தனி இசை ஆல்பம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 2024ல் வெளியான அவரது இசை ஆல்பமான "ஆச கூட" 398 மில்லியன் பார்வைகளையும், "கட்சி சேரா" பாடல் 266 மில்லியன் பார்வைகளையும் யு டியூப் தளத்தில் பெற்றுள்ளது.
அடுத்து மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியான "பவழமல்லி" ஆல்பம் தற்போது 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இசை உலகில் தனி ஆல்பம் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார் சாய். வேறு எந்த இசையமைப்பாளருக்கும் இப்படியான ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை.
தற்போது "பென்ஸ், மார்ஷல்" ஆகிய தமிழ்ப் படங்களுக்கும், தெலுங்கில் "ராக்கா" படத்திற்கும் இசையமைத்து வருகிறார் சாய்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!