
நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா
ஜூன் 09, 2023
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை சோனா. அவரது நடிப்பை பாராட்டி நடந்து முடிந்த ஜீ தமிழ் குடும்ப விருது விழாவிலும் சிறந்த வில்லிக்கான விருது சோனாவிற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகையுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சோனா அந்த சீரியலை விட்டு விலகிவிட்டார். இதனையடுத்து சோனா நடித்து வந்த தாரா கதாபாத்திரத்தில் நடிகை சாதனா நீண்ட நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ளார். சினிமாவில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்ற சாதனா சின்னத்திரையில் "தென்றல்" தொடரின் மூலம் அறிமுகமானார். அதில் வில்லியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்ற அவர் தற்போது மாரி தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!