சின்னத்திரையில் மீண்டும் சீரியலுக்கு திரும்பிய ரீமா
செப் 04, 2021
Advertisement
விஜய் டிவி பிரபலமான ரீமா அசோக் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சின்னத்திரையில் தோன்றவுள்ளார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையின் கவர்ச்சி புயலாக வலம் வந்து ரசிகர்களின் மனதை கிறங்கடித்தவர் ரீமா அசோக். விஜய் டிவியின் களத்துமேடு, கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, றெக்கை கட்டி பறக்குது மனசு, சின்னத்தம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும் விஜய் டிவியின் டான்ஸ் ஷோவான "ஜோடி பன் அன்லிமிடெட்" என்ற நிகழ்ச்சியில் ராமருக்கு ஜோடியாக அசத்தலான ஆட்டம் போட்டார்.
இப்படி தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து, மகிழ்வித்து வந்த ரீமா திடீரென சில நாட்கள் காணாமல் போய்விட்டார். தற்போது அவர் மீண்டும் திரையில் தோன்றவுள்ள செய்தியை தனது ரசிகர்களுக்கு இண்ஸ்டா பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். "ஷூட்டிங் தொடங்கியது" என சிம்பிளாக தனது அடுத்த ப்ராஜெக்ட் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். ஆனால், அவர் சின்னத்திரையில் எந்த சீரியலில் அல்லது நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார் என்ற தகவல் சஸ்பென்ஸாக வைத்துள்ளார். ரீமா மீண்டும் நடிக்க இருப்பதை தெரிந்து கொண்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!