
சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ராதிகா ப்ரீத்தி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்
ரசிகர்கள் பலரும் ராதிகா ப்ரீத்தி ஏன் சீரியலை விட்டு விலகினார்? மீண்டும் சீரியலில் நடிப்பாரா? என கேள்விகள் கேட்டு வந்தனர். இதற்கிடையில் ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்த "நாதிரு தின்னா" திரைப்படத்தின் ரிலீஸ் புரோமோஷன்களும் கலைக்கட்டியதால் அவர் மீண்டும் சீரியலில் நடிக்க வரமாட்டார் என ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால், ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ராதிகா ப்ரீத்தி மீண்டும் சின்னத்திரைக்கு வரவுள்ளார். ஒரு பிரபல தொலைக்காட்சியில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் தொடரில் ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால், ராதிகா ப்ரீத்தியின் ரசிகர்கள் பலரும், அவரது ரீ- என்ட்ரியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!