
ஜான்சி ராணி ரோலில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரச்சிதா
ஆக 13, 2022
Advertisement
சின்னத்திரையின் நயன்தாரா என பெயரெடுத்த ரச்சிதா, கலர்ஸ் தமிழ் சேனலின் "சொல்ல மறந்த கதை" என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது அவர் ஜீ தமிழ் சீரியலில் கெஸ்ட் ரோலில் என்ட்ரியாகிறார். தேவயாணி, வீஜே பார்வதி மற்றும் அபிஷேக் சங்கர் ஆகியோர் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் "புதுப்புது அர்த்தங்கள்" தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் வக்கீல் ஜான்சி ராணி என்கிற வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க ரச்சிதா மஹாலெட்சுமி கமிட்டாகியுள்ளார். இந்த தகவலை ரச்சிதாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விரைவில் அவர் நடிக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளது. "புதுப்புது அர்த்தங்கள்" தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!