
ஷிவனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா
செப் 23, 2023
Advertisement
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரச்சிதாவும், ஷிவினும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதிலும், ஷிவினை தனது தங்கை என்று அழைத்து ரச்சிதா, பிக்பாஸ் வீட்டிலிருந்து ஷிவின் வெளியே வந்த போது மிகப்பெரிய வரவேற்புடன் ஊர்வலமே நடத்தினார். இந்நிலையில், ஷிவினின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ரச்சிதா, "என் பாப்பாவின் பிறந்தநாள்" என இன்ஸ்டாகிராமில் நேற்று, (செப்டம்பர் 22) வீடியோ வெளியிட்டுள்ளார். இவர்களது நட்பை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்த ரசிகர்கள் இருவரை பாராட்டியும், ஷிவினின் பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…