நடராஜ் வீட்டில் நடந்தது என்ன? புகழ் வெளியிட்ட வைரல் வீடியோ!
மார் 23, 2022
Advertisement
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் நான்-பிக்சன் நடிகராக அறிமுகமானவர் புகழ். தற்போது வெள்ளித்திரையை ஒரு கை பார்த்துக்கொண்டிருக்கிறார். சினிமாவில் அறிமுகமான சில நாட்களிலேயே கிட்டத்தட்ட 5 படங்களில் காமெடியனாக நடித்து முடித்துள்ள புகழ், தற்போது புதிய படமொன்றில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். மிஸ்டர் ஸூ கீப்பர் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.
இதற்கிடையில் கிரிக்கெட் வீரரான நட்ராஜன், புகழின் தீவிர ரசிகர் ஆவார். அவர் புகழை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க, புகழும், நடராஜன் வீட்டுக்கு சென்று விருந்து சாப்பிட்டுள்ளார். அண்மையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தற்போது நடராஜன் வீட்டிற்கு சென்றது முதல் இருவருக்குமிடையே நடந்த உரையாடல்கள் வரை ஒரு சிறு வீடியோவாக எடிட் செய்து புகழ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
அதில் புகழ், "ரொம்ப நாளாவே நம்ம நடராஜ் என்ன பாக்கணும் அண்ணான்னு கூப்டுட்டு இருக்கார். அவர் வீட்டுக்கு போயிட்டு இருக்கோம்" என்று சொல்கிறார். அதன் பின் பேசும் நடராஜ், "எங்க வீட்டுல அப்பா தங்கராசு, அம்மா சாந்தா மூன்று தங்கைகள், அப்புறம் ஒரு தம்பி. நான் சாதிக்கிறதுக்கு முன்னாடி எனக்கு நிறைய தடைகள் வந்துச்சு. எங்க ஊர்ல இருந்து போறதுக்கு பஸ் கிடையாது. நல்ல துணி கிடையாது. எங்க வீட்ல பாத்ரூம் கூட கிடையாது. எனவே நான் பட்ட கஷ்டத்தை மற்ற இளைஞர்கள் படக்கூடாது" என கூறுகிறார். உள்ளூரில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி செய்ய அவரது சொந்த முயற்சியில் கிரிக்கெட் கிரவுண்ட் ஒன்றை ரெடி செய்து வருகிறார் எனவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலானதையடுத்து புகழ் மற்றும் நடராஜனுக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!