18 ஆண்டுகளுக்கு பின் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரகர்ஷிதா : இவரை ஞாபகம் இருக்கா?
ஆக 08, 2023
Advertisement
குழந்தை நட்சத்திரமான பிரகர்ஷிதா 90-கள் காலக்கட்டத்தில் வேலன், ராஜ ராஜேஸ்வரி போன்ற பக்தி நாடகங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் பொம்மி என்ற சிறுபெண்ணாக அத்திந்தோம் பாடலில் தோன்றியிருந்தார். அதன்பின் 18 ஆண்டுகளாக திரையிலேயே தோன்றாத அவர் தற்போது சின்னத்திரை சீரியலில் நடிக்க வருகிறார்.
ராதிகா சரத்குமார் நடிக்கும் "தாயம்மா" என்ற தொடர் பொதிகை டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. அந்த தொடரில் தான் பிரகர்ஷிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரகர்ஷிதாவே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சில மீம் இமேஜ்களையும், நடிகை ராதிகாவுடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பிரகர்ஷிதாவுக்கு திருமணமாகி அழகான பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், அவரது கம்பேக் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!