ரூ.230 கோடி வசூலைக் கடந்த பெத்தி
ஜூன் 08, 2026
Advertisement
புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், ராம்சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் "பெத்தி". பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் 3 நாட்களில் உலக அளவில் 236 கோடியே 7 லட்ச ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதல் நாளில் 135 கோடியே 36 லட்ச ரூபாய் வசூலித்தது. இரண்டாம் நாளில் 45 கோடியே 64 லட்சம் ரூபாயும், மூன்றாவது நாளில் 54 கோடியே 9 லட்ச ரூபாயும் வசூலித்துள்ளது. நேற்றைய நான்காம் நாள் வசூல் மூன்றாம் நாள் வசூலை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்திருந்தால் நான்கு நாட்களில் 300 கோடி வசூல் என இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்.
முக்கிய ஆன்லைன் டிக்கெட் இணையதளங்களில் மட்டும் 4 மில்லியன் டிக்கெட்டுகள் இதுவரை விற்பனை ஆகியுள்ளதாம். அமெரிக்காவில் மட்டும் 2.8 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை இப்படம் இதுவரையில் பெற்றுள்ளது.
இன்னும் 100 கோடி வசூலித்தால் இந்தப் படம் லாபக் கணக்கை ஆரம்பித்துவிடும் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!