
மீண்டும் நடிப்பிற்கு திரும்பும் நிவேதா பெத்துராஜ்
இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின் இப்போது மீண்டும் நடிப்பிற்கு இவர் திரும்புகிறார். தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் முதல் முறையாக நடிகர் வெங்கடேஷ் உடன் இணைந்து புதிய படம் இயக்குகிறார். இதற்கு "ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர் 47" என தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே த்ரிவிக்ரம் இயக்கிய அல வைகுந்தபுரம் படத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தார் என குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள் (2)
கருத்து எழுதுங்கள்எனவே கைச்செலவுக்கு என்ன செய்ய ???
வருமானம் நின்னு போச்சி .. வேற வழி ?