கலர்ஸ் தமிழில் நிக்கி கல்ராணி
மே 31, 2022
Advertisement
தமிழ் சினிமாவில் நடிகை " நிக்கி கல்ராணி "டார்லிங்" படத்தின் முலம் அறிமுகமானார். பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகத நாணயம், கலகலப்பு 2 ,சார்லி சாப்லின் 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நிக்கி கல்ராணி சில வருடங்களாக நடிகர் ஆதியை காதலித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது .
இந்நிலையில் திருமணத்தை முடித்த ஒரு சில நாட்களிலேயே சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் நிக்கி கல்ராணி கலந்து கொள்ள இருக்கிறார். வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி முதல் கலர்ஸ் தமிழில் "வெல்லும் திறமை" என்ற புதிய நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவராக நிக்கி கல்ராணி கலந்துக்கொள்ள உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!