
புது சீரியலில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் நவீன்
செப் 09, 2023
Advertisement
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நவீன், பல நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் குரலில் பேசி மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதனைதொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான "பாவம் கணேசன்" தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த தொடரானது சென்ற வருடம் அக்டோபர் மாதம் நிறைவடைந்தது. இதனையடுத்து நடிப்பதற்கான வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த நவீனுக்கு விரைவில் வெளியாகவுள்ள "நீ நான் காதல்" என்ற தொடரில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தெலுங்கு சீரியலான "நுவ்வு நேனு ப்ரேமா" தொடரின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. பாவம் கணேசன் தொடரில் பாசிட்டிவ் ரோலில் அப்பாவியாக நடித்த நவீன் இந்த சீரியலில் வில்லனாக எப்படி நடிப்பார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…