
ஒரு ஹீரோயின் செய்யுற வேலையா இது? மோனிஷாவை கலாய்க்கும் ரசிகர்கள்
ஹீரோயினாக நடிக்கும் மோனிஷா சூட்டிங் ஸ்பாட்டில் செய்துள்ள குறும்புத்தனமான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரெட்டை ஜடையுடன் பள்ளி சீருடையில் சிறுமி க்யூட்டாக இருக்கும் மோனிஷா குளத்துக்கு அருகில் ஒரு சிறிய மீன் குஞ்சை கைகளில் பிடித்து விளையாடி மீண்டும் தண்ணீருக்குள் விடுகிறார். அது இறந்துவிட்டதா? என்று மோனிஷா ஆராய்ச்சி செய்யும் வேளையில் மீன்குஞ்சு துள்ளிக்குதித்து மீண்டும் தண்ணீருக்குள் விழுகிறது. இந்த வீடியோவை தனது இண்ஸ்டாகிராமில் மோனிஷா பகிர்ந்துள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் "சின்ன பொண்ணு மாதிரி விளையாட்டு பண்ணியாச்சு" என மோனிஷாவின் க்யூட்னஸை கமெண்ட் அடித்து வருகின்றனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!