கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம்
மே 19, 2024
சின்னத்திரை நகைச்சுவை கலைஞரான மதுரை முத்துவின் அப்பா ஊர் நாட்டாமையாக இருந்தவராம். பிரிட்டிஷ்காரர் காலத்தில் முத்துவின் தாத்தாவும் அதன் பிறகு அவரது அப்பாவும் முன்சீப் என்று அழைக்கக் கூடிய ஊர் நாட்டாமை பதவி வகித்துள்ளார்கள். அவரது பேச்சை சுற்று வட்டாரத்தில் இருக்கும் 12 கிராமத்துகாரர்களும் தட்டமாட்டார்களாம். இப்படிபட்ட குடும்பத்திலிருந்து வந்த மதுரை முத்துவை, அவரது அப்பா வாத்தியராகவோ, வீஏஓ அதிகாரியாகவோ பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். ஆனால், முத்து காமெடியானாக மாறியது அவரது அப்பாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கூத்தாடி ஆயிட்டியே என்று திட்டிக் கொண்டே இருப்பாராம்.
ஒருமுறை முத்துவின் தந்தை ஊர் பிரச்னைக்காக கலெக்டரிடம் சென்ற போது, கலெக்டர் என் அப்பாவிடம் "நீங்க மதுரை முத்து அப்பாவா?" என்று கேட்டிருக்கிறார். என் நிகழ்ச்சியை விடாமல் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார். அதன்பின் தான் என் அப்பாவுக்கு நானும் ஏதோ உருப்படியாக வாழ்கிறேன் என்று நம்பிக்கை வந்தது. எங்க அப்பா பெரிதாக சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும் நன்றாக படிக்க வைத்தார். இப்போது நான் பெயர், புகழ், பணம் என்று இருக்கிறேன் என்று சொன்னால் அது என் அப்பா செஞ்ச புண்ணியம் தான் என்று தனது தந்தை குறித்து மதுரை முத்து உருக்கமாக பேசியுள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!