
போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர்
மார் 31, 2023
Advertisement
விஜய் டிவியின் "சிப்பிக்குள் முத்து" தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் லாவண்யா. சீரியலில் நடிக்கும் முன்பே மாடல் அழகியாக பிரபலமான இவர், சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்த போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். பிரபல இயக்குநர் ஒருவர் லாவண்யாவை தன்னிடம் போனில் பேசிக்கொண்டே இருக்க வேண்டும், அப்படி செய்தால் ஆறு மாதத்திற்கு பிறகு அவரது கேரியரையே வேறு லெவலுக்கு எடுத்துச்செல்வேன் என்று கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ந்தாலும், இந்த விவகாரத்தை இப்போது பெரிதாக்கினால் நமது எதிர்காலத்தை முடித்துவிடுவார்கள் என பயந்து அமைதியாகிவிட்டாராம். அதன்பிறகு அந்த இயக்குநரிடமிருந்தும் விலகிவிட்டாராம்.
லாவண்யா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் லாவண்யாவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
லாவண்யா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் லாவண்யாவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…