
காதலில் விழுந்தாரா ரியா?
அதற்கு காரணம், சமீபத்தில் நடந்த விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியில் வீஜே விஷாலுக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் மேடையில் ஏறியது முதல் விருதை வாங்கி பேசி முடித்துவிட்டு கீழே இறங்கி வரும் வரை அடிக்கடி ரியாவின் முகத்தை காண்பித்தனர். அதிலும், ரியாவின் அருகிலிருந்த அர்ச்சனா அடிக்கடி ரியாவின் ரியாக்ஷனை பார்த்துக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் சமூகவலைதளத்தில் கேள்வி பதிலில் ரசிகர் ஒருவர் "உங்கள எப்படி கரெக்ட் பன்றது" என்று கேட்க, ரியா "நான் அல்ரெடி கமிட்டெட்" என பதிலளித்துள்ளார். இந்த புள்ளிகளை இணைத்து துப்பறிந்த நெட்டிசன்கள் விஷாலை தான் ரியா காதலிக்கிறார் என கிளப்பி விட்டுள்ளனர். எனினும், இது குறித்து ரியாவோ, விஷாலோ வெளிப்படையாக எந்த ஒரு தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!