
சின்னத்திரையில் இனி நடிக்கமாட்டேன்! பிரியங்கா அதிரடி
செப் 11, 2024
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பான "காற்றுக்கென்ன வேலி" தொடரில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் பிரியங்கா குமார். இடையிடையே சில ஷார்ட் பிலிம்களிலும், சினிமாவிலும் நடித்து வந்த அவருக்கு தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் இருந்து வருகிறது. அவரது நடிப்பில் இதுவரை இரண்டு தெலுங்கு படங்கள் வெளியாகியுள்ள நிலையில் மூன்றாவதாக ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
இந்நிலையில் அவர் சின்னத்திரையில் மீண்டும் நடிக்க போவதில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், சினிமாவில் வாய்ப்புக்காக தான் சின்னத்திரையில் நடித்தேன். இனி தற்போது ஒப்பந்தமாகியுள்ள படத்திற்காக என் முழு உழைப்பையும் கொடுப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…