
வில்லியாக என்ட்ரியாகும் கீதா ரவிசங்கர்
டிச 04, 2021
Advertisement
கண்ணான கண்ணே சீரியல் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த மெகா தொடரில் ராகுல் ரவி, நிமேஷிகா ராதா கிருஷ்ணன், பப்லு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அப்பா மகளுக்கு இடையே நடக்கும் பாச போராட்டத்தையும், அப்பாவின் ஈகோ குணத்தால் ஏற்படும் பிரச்னைகளையும் மையக்கருவாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 250 எபிசோடுகளை தாண்டியுள்ள இந்த தொடர் புதிய திருப்பங்களுடன் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை கீதா ரவிசங்கர் கண்ணான கண்ணே தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது கதாபாத்திரம் சமீபத்திய எபிசோடில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கீதா ரவிசங்கர் முன்னதாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல முறை குணச்சித்திர கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!