
மீண்டும் வில்லியாகும் பரீனா ஆசாத்
ஜூலை 08, 2024
Advertisement
சின்னத்திரை தொகுப்பாளினியான பரீனா, பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் சீரியலில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். அந்த தொடரில் வில்லியாக மிரட்டிய பரீனாவின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தது. அதன்பிறகு சில சீரியல்களில் பரீனா நடித்தாலும் அவையெல்லாம் பெரிதாக பேசப்படவில்லை. பாரதி கண்ணம்மா சீசன் 2வும் விரைவாகவே முடித்து வைக்கப்பட்டது. அதன்பிறகு பரீனாவுக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைக்காததால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், அவருக்கு மீண்டும் சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‛நினைத்தாலே இனிக்கும்" ஹிட் தொடரில் மீண்டும் வில்லியாக, பழிவாங்கும் பாம்பாக பரீனா என்ட்ரி கொடுத்துள்ளார். அதன் புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!