
லிப்லாக் காட்சியில் ‛எதிர்நீச்சல் ஜனனி
ஜூலை 11, 2023
Advertisement
எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்கிற மைய கதாபாத்திரத்தில் மதுமிதா நடித்து வருகிறார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இவர் முதலில் கன்னட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது தமிழில் எதிர்நீச்சல் தொடரிலும், தெலுங்கில் நம்பர் 1 கோடலு என்ற சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். ஜனனி கதாபாத்திரத்தின் மூலம் தமிழில் பிரபலமான மதுமிதாவுக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், மதுமிதா தெலுங்கில் நடித்து வரும் சீரியலில் லிப்லாக் காட்சியில் நடித்துள்ளார். அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக, "நம்ம ஜனனியா இப்படி?" என தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து கேள்வி கேட்டு வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!