செல்லம்மா சீரியலிலிருந்து வெளியேற காரணம் இதுதான் : மனம் திறக்கும் திவ்யா கணேஷ்
டிச 20, 2022
Advertisement
விஜய் டிவியின் "பாக்கியலெட்சுமி" மற்றும் "செல்லம்மா" ஆகிய தொடர்களில் நடித்து வந்த திவ்யா கணேஷ், திடீரென செல்லம்மா தொடரிலிருந்து விலகினார். இதனையடுத்து திவ்யா கணேஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக தான் சீரியலை விட்டு விலகினார் என்று சிலரும், அந்த தொடரின் நாயகன் அர்னவ் தான் காரணம் என்று சிலரும், டிஆர்பி குறைந்ததால்தான் விலகிவிட்டார் என்றும் பலவாறாக கருத்துகள் எழுந்தன.
இந்நிலையில், சீரியலை விட்டு விலகியதற்கானக் காரணத்தை திவ்யா கணேஷ் அண்மையில் சோஷியல் மீடியா லைவ்வில் வந்த போது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். அதில், "செல்லம்மா தொடரில் என்னை தொந்தரவு செய்து கொண்டே இருந்தனர். வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதி இல்லை என்றால் வேலையை விட்டுவிடுவோம் அல்லவா? அதனால் தான் விலகிவிட்டேன். அதே சமயம் பாக்கியலெட்சுமி தொடரில் தொடர்ந்து ஜெனியாக நடிப்பேன். அந்த சீரியலிலிருந்து விலகும் பேச்சுக்கே இடம் இல்லை" என்று கூறியுள்ளார். எனினும், செல்லம்மா தொடரில் தன்னை தொந்தரவு செய்தது யார்? என்ன செய்தார்கள் என்பது குறித்து திவ்யா எதையும் வெளிப்படையாக கூறவில்லை.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!