பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகலா? - குமரன் தங்கராஜன் விளக்கம்
மார் 10, 2023
Advertisement
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் குமரன் தங்கராஜன். சினிமாவிலிருந்து சீரியலுக்கு நடிக்க வந்த இவருக்கு மீண்டும் சினிமா வட்டாரத்தில் நுழையும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அண்மையில் ஓடிடியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வதந்தி வெப்சீரிஸில் குமரன் தங்கராஜன் நடித்திருந்தார். அதில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து, மாயாதோட்டா என்ற புதிய வெப்சீரிஸில் நடிக்கும் வாய்ப்பும் குமரனுக்கு கிடைத்தது. ஹிந்தி ஓடிடியான ஹங்காமா ப்ளேயில் இந்த தொடர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் வரிசையாக வெப்சீரியஸில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் குமரன் இனி பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது.
இதற்கு பதிலளித்துள்ள குமரன், "பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்துக் கொண்டிருக்கும் போதே வதந்தி, மாயத்தோட்டா வெப் சீரிஸ்களில் நடித்து முடித்துவிட்டேன். ஆனால், இனிவரும் காலங்களில் திரைப்படங்கள், வெப்சீரிஸ்களில் நடிக்கும் போது கால்ஷீட் கொடுக்க நேரம் இல்லாமல் போனால் கண்டிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகிவிடுவேன்" என்று கூறியுள்ளார்.
மாயத்தோட்டாவுக்கு பிறகு குமரன் எந்த ப்ராஜெக்டிலும் கமிட்டானதாக அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. எனவே, இன்னும் சில நாட்கள் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நீடிப்பார் என ரசிகர்கள் திருப்தியடைந்துள்ளனர்.
--

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!