
வானத்தை போல சீரியலுக்கு குட்பை சொன்ன தேப்ஜானி மோடக்!
ஏப் 27, 2023
Advertisement
வானத்தை போல தொடரில் பெங்காலி சின்னத்திரை நடிகையான தேப்ஜானி மோடக் ஹீரோயினாக நடித்து வந்தார். கதையின் ஆரம்பத்தில் அவர் தான் ஹீரோவுக்கு ஜோடியாக சில ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்தார். ஆனால், கதையின் போக்கு தற்போது முற்றிலும் மாறிவிட்டது. எப்போதவது வந்து செல்லும் கெஸ்ட் ரோல் மாதிரி தேப்ஜானியின் கதாபாத்திரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடுப்பான தேப்ஜானி வானத்தை போல சீரியலிலிருந்து நிரந்தரமாக விலகிக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக தனது இண்ஸ்டாகிராமில் அறிவித்துவிட்டார். ஹீரோயினா வந்தவங்கள, இப்படி கெஸ்ட் ரோல் பண்ண வச்சுட்டீங்களே!
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!