
நயன்தாராவுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியிட்ட டிடி!
அந்த வகையில் கடைசியாக ஆர் ஆர் ஆர் படத்தின் புரோமோஷனுக்காக ராம்சரண், ராஜமவுலி, ஜூனியர் என்டிஆரை டிடி பேட்டி எடுத்திருந்தார். தற்போது கனெக்ட் படத்தின் புரமோஷனுக்காக நயன்தாராவை டிடி பேட்டி எடுத்துள்ளார். அந்தசமயம் திய்வதர்ஷினி நடிகை நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து, "லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மகிழ்ச்சியான முகத்துடனும், மனநிறைவுடனும் இருந்தார். அவர் மிகவும் இணக்கத்துடன் தனது 20 ஆண்டுகால உழைப்பு குறித்து இந்த நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார். இன்ஸ்பைரிங் நபரான அவருடன் அமைந்த இந்த உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது" என்று கூறியுள்ளார். டிடி - நயன்தாரா காம்போவை விரைவில் திரையில் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!