
கடின உழைப்புக்கு கிடைத்த பலன் : சாந்தினி - நந்தா ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள்
செப் 14, 2021
Advertisement
சித்து பிளஸ் 2, வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாந்தினி தமிழரசன். நடன இயக்குனர் நந்தாவை திருமணம் செய்த இவர் இப்போது சின்னத்திரையில் பிஸியாக உள்ளார். அதேப்போன்று நந்தாவும், நடனம், சின்னத்திரையில் பிஸியாக உள்ளார். இந்த தம்பதியினர் தங்களது புது வீட்டின் புதுமனை புகுவிழாவை சமீபத்தில் விமர்சையாக கொண்டாடியுள்ளனர். இந்த சந்தோஷமான நிகழ்வில் குடும்ப உறுப்பினர்களுடன், சக நடிகர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை சக நடிகரான அம்ருத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “கடின உழைப்புக்கு கிடைத்த பலன்... புதிய வீட்டிற்கு வாழ்த்துகள்...உங்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்” என தனது வாழ்த்துகளை அவர்களுக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து சாந்தினி - நந்தா ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!