
ரச்சிதாவின் வாழ்வில் இவ்வளவு கொடுமையா? கலங்க வைக்கும் சோகக்கதை
நேற்றைய தினம் (டிச,20) வெளியாகியுள்ள பிக்பாஸ் புரோமோவில் சக ஹவுஸ்மேட்களுடன் பேசிக்கொண்டிருக்கும் ரச்சிதா, "அப்பா டிரைவர், அம்மா படிக்காதவர். அவங்கள பார்த்து வளரும் போது நிறைய சண்டை மட்டும் தான் பார்த்துருக்கேன். பொண்ணு படிக்க மாட்டேங்கிறாளேன்னு சொல்லிட்டு நிறைய வாட்டி என் அம்மாவே என் கழுத்த நெரிச்சு நீ செத்துரு நீ செத்துருன்னு சொல்லுவாங்க" என சொல்லி கண்கலங்குகிறார். இந்த புரோமோ தற்போது வைரலாகி அதிக கவனம் ஈர்த்து வருகிறது.
முன்னதாக ரச்சிதா தனது திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் கணவருடனான பிரிவையும் குறித்து கூறியிருந்தார். தொடர்ந்து சமீபத்தில் கூட பெண் குழந்தையை தத்தெடுப்பேன் என கூறியிருந்தார். இவ்வாறாக பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா தொடர்ந்து தனது வாழ்வின் சோகக்கதைகளை கூற நேயர்களோ "ரச்சிதாவுக்கு இவ்வளவு கொடுமை நடந்திருக்கா?" என அவருக்காக பரிதாபப்பட்டு வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!