
மாற்றுத்திறனாளி பட்டதாரிக்கு மூன்று சக்கர வாகனம் வாங்கி தந்த பாலா
பிப் 29, 2024
Advertisement
கலக்கப்போவது யாரு, குக்வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. அதோடு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பொது சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். மலைப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாகவும் பணமாகவும் உதவி செய்தார். இப்படி பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் பாலா, தற்போது மாற்றுத்திறனாளி எம்சிஏ படித்த பட்டதாரி ஒருவர் மூன்று சக்கரம் வாகனம் இல்லாததால் வேலைக்கு செல்ல முடியவில்லை என்று தெரிவித்ததை அடுத்து அவருக்கு மூன்று சக்கர வாகனத்தை வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அந்த மாற்றுத்திறனாளியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் பாலா.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!