
செல்லம்மா சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுத்த அர்னவ்
நவ 05, 2022
Advertisement
சின்னத்திரை நடிகரான அர்னவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா தொடரில் கதாநாயகானாக நடித்து வந்தார். அர்னவ்வின் மனைவியும், சின்னத்திரை நடிகையுமான திவ்யா ஸ்ரீதர், அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக சமீபத்தில் போலீஸில் புகார் அளித்திருந்தார். காவல்துறை அர்னவை கைது செய்த நிலையில், நீதிமன்றம் அர்னவ்வை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இதற்கிடையில் அர்னவ் செல்லம்மா சீரியலை விட்டு விலகிவிட்டதாகவும், அவருக்கு பதில் வேறொரு நடிகர் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. தற்போது ஜாமீன் கிடைத்து வெளிவந்துள்ள அர்னவ், செல்லம்மா சீரியலில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் தனது இண்ஸ்டாகிராமில் "காதலோடு வாழும் வாழ்க்கை ஒருபோதும் சலிக்காது" என்ற கேப்ஷனுடன் தனது கம்பேக்கை உறுதி செய்துள்ளார்
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!