
நாங்கள் பிரிகிறோமா? - ஸ்ரீஜா நச் பதில்
ஜூன் 05, 2024
Advertisement
சரவணன் மீனாட்சி தொடரில் ஜோடியாக நடித்த மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா நிஜ வாழ்விலும் ஜோடியாக இணைந்தனர். இவர்களுக்கு 10 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் தேவ் என்ற மகன் பிறந்திருக்கிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் விவகாரத்து பெற இருப்பதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தது. அதுகுறித்து தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஸ்ரீஜா, "உண்மையில் எங்களுக்குள் அவ்வளவு சண்டைகள் நடந்துள்ளது. பல மோசமான சண்டைகளை எதிர்கொண்டோம். இப்போதும் சண்டை போட்டு கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், மகன் பிறந்திருப்பதால் சண்டைக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை. சில நேரங்களில் சண்டை போடும் போது பிரிந்துவிடலாமா என்று கூட யோசித்து இருக்கிறோம். ஆனால், அதையும் மீறி அவரிடம் பேச வேண்டும் என்று எனக்கு தோன்றும். என்னை பொருத்தவரை அதை நான் ஒரு மேஜிக் என்று சொல்வேன். உங்கள் உறவில் அந்த மேஜிக் வந்துவிட்டதால் போதும் என்ன ஆனாலும் அந்த உறவு நம்மை விட்டு போகாது" என்று கூறியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!