
ரொமாண்டிக் ஓவியம் : ஆனந்தியை கலாய்த்த பரீனா
ஜூலை 28, 2022
Advertisement
சின்னத்திரை நடிகையான ஆனந்தி தனது ஓவியம் வரையும் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பென்சில் ஆர்ட் முறையில் ஆனந்தி வரையும் ஓவியங்களை அவர் தனது இண்ஸ்டாகிராமில் வெளியிட அதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. அதில், சிலவற்றில் ரொமாண்ஸ் தூக்கலாக இருப்பதால் ரசிகர்களுடன் சேர்ந்து சக நடிகைகளும் அவரை கிண்டலடித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருப்பது போல் ஓவியத்தை வரைந்து வெளியிட்டுள்ள ஆனந்தி, கேப்ஷனில் "மழை வந்தாலே ரொமாண்ஸ் மூட் வந்துவிடுகிறது" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பிரபல சின்னத்திரை நடிகை பரீனா ஆசாத், "ஆஹான்... ஆர்யாவுக்கு தம்பி பாப்பா வா" என கேட்டு பதிவிட்டுள்ளார். அதை ஆமோதிப்பது போல் நடிகை நக்ஷத்திராவும் கமெண்ட் அடித்து ஆனந்தியை கலாய்த்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!