
இனியா குழுவினருக்கு நன்றி சொன்ன ஆல்யா!
நவ 05, 2024
Advertisement
ஆல்யா மானசா ஹீரோயினாக நடிக்க சக்கை போடு போட்டு வந்த தொடர் "இனியா". இதில், ரிஷி ராஜ், மான்ஸி ஜோஸி, தீபக், பிரவீனா, சாய் மாதவி, ராஜா லோகநாதன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வந்தனர். இந்நிலையில், இந்த தொடரானது 646 எபிசோடுகளுடன் நவம்பர் 3ம் தேதி முடிவடைந்துள்ளது. இதனையடுத்து அந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த ஆல்யா மானசா ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடன் நடித்த நடிகர்கள், குழுவினர், வாய்ப்பு அளித்த தொலைக்காட்சி என அனைவருக்கும் தனது நெகிழ்ச்சியான நன்றியினை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இனியா தொடரின் ரசிகர்கள் இனியாவையும், விக்ரமையும் இனி எப்போதுமே மிஸ் செய்யப்போவதாக கவலையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…