16 ஆண்டுகளுக்கு பிறகு சின்னத்திரையில் ஜெயஸ்ரீ
மார் 03, 2023
தமிழ் சினிமாவின் 80-கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜெயஸ்ரீ முதல் படத்திலேயே நீச்சல் உடையில் நடித்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார். 1985-ல் வெளியான தென்றலே என்னைத் தொடு படத்தின் மூலம் அறிமுகமான அவர், அதிலிருந்து சரியாக மூன்றே ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சில படங்களில் நடித்து திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக திரைத்துறையை விட்டு விலகினார்.
சின்னத்திரையில் 2007ம் ஆண்டு ஒளிபரப்பான "திருவாளர் திருமதி" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்த ஜெயஸ்ரீ, 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதிரடியாக ஹிட் அடித்து வரும் "எதிர்நீச்சல்" தொடரில் கல்லூரி தாளாளராக ஜெயஸ்ரீ நடித்துள்ளார். பெண்களின் ஆளுமையை எடுத்துரைக்கும் இந்த தொடரில் ஜெயஸ்ரீ நடித்து வரும் கதாபாத்திரம் வருங்காலங்களில் அதிக முக்கியத்துவம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!