சின்னத்திரையில் மீண்டும் என்ட்ரியாகும் ராகவ்
ஜூன் 29, 2023
பிரபல நடிகரான ராகவ் ரங்கநாதன் செவ்வந்தி தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால், அந்த தொடரில் அவர் இறந்தது போல் காண்பிக்கப்பட்டு ராகவ் கதாபாத்திரத்திற்கு எண்ட் கார்டு போட்டுவிட்டனர். அதன்பின் எந்த ப்ராஜெக்டிலும் கமிட்டாகமல் இருந்த ராகவ் தற்போது மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "கண்ணெதிரே தோன்றினாள்" சீரியலில் மாளவிகா அவினாஷ், ஸ்வேதா கெல்கே, ஜெயஸ்ரீ, ரேகா கிருஷ்ணப்பா, வடிவுக்கரசி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
தற்போது அந்த தொடரில் மேலும் சுவாரசியத்தை கூட்டும் வகையில், நடிகர் ராகவ் ரங்கநாதனும் முக்கிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதுகுறித்து பேசுகையில், "கண்ணெதிரே தோன்றினாள் என்ற சூப்பர் ஹிட் தொடரில் இணைவதில் ஆவலாக உள்ளேன். நீண்டநாட்களுக்கு பிறகு மாளவிகா அவினாஷூடன் இணைந்து பணியாற்றுவதால் உற்சாகமாக இருக்கிறேன் " என்று கூறியுள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!