
புதிய வீட்டில் குடியேறும் நாகசைதன்யா
இந்த நிலையில், நாகசைதன்யாவுடன் தான் இணைந்து வாழ்ந்து வந்த வீட்டில் இப்போதும் சமந்தாவே வாழ்ந்து வருகிறார். அதனால் அங்கிருந்து வெளியேறியுள்ள நாகசைதன்யா தற்போது புதிய பங்களா ஒன்றை வாங்கியிருப்பதாகவும் அங்கு விரைவில் குடியேறப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், கடந்த ஆண்டில் ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸில் ஒரு பங்களா வாங்கினார் நாகசைதன்யா. அதன் கட்டுமான வேலைகள் இன்னும் முடியவில்லையாம். அந்த பங்களா தயாரானதும் அதில் நாகசைதன்யா குடியேறுவார் என்றும் புதிய செய்திகள் வெளியாகியுள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!