
ஏழைப்பெண் திருமணம் : சுரேஷ்கோபி ஒரு லட்சம் உதவி
இருபது வருடங்களுக்கு முன்பே தந்தையை இழந்த அஸ்வதிக்கு, திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த சமயத்தில் தான் கொரோனா தாக்கம் காரணமாக திருமணத்தை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. வரும் செப்-9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் இந்த தகவல் சிலர் மூலமாக சுரேஷ்கோபிக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்தப்பெண்ணை அழைத்து, ஏற்றுமானூர் மகாதேவன் கோவிலில் முன்பாக வைத்து, திருமண பட்டுச்சேலையுடன் ஒரு லட்சம் ரூபாயை திருமண அன்பளிப்பாக வழங்கியுள்ளார் சுரேஷ்கோபி. அவரது இந்த செயல் சோஷியல் மீடியாவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!