
சிங்கம் நாளில் துவங்கிய மோகன்லால் - மம்முட்டி படங்கள்
இதில் மம்முட்டி, பார்வதி நடிக்கும் புழு என்கிற படத்தை அறிமுக பெண் இயக்குனர் ரதீனா என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தின் பூஜைக்கு மம்முட்டி மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கலந்துகொண்டார். அதேசமயம் படத்தின் நாயகியான பார்வதி இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
அதேபோல மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் "12த் மேன்" என்கிற படத்தின் பூஜையும் நடைபெற்றது. ஆனால் தற்சமயம் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ப்ரோ டாடி படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருவதால் மோகன்லால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கும் உன்னி முகுந்தன், பிரியங்கா நாயர், ஷிவதா ஆகியோர் இந்த பூஜை நிகழ்வில் கலந்துகொண்டனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!