
ஜூலை-15ல் ஓடிடியில் வெளியாகும் மாலிக்
இந்தப்படத்திற்கு பின் பஹத் பாசில் நடிப்பில் உருவான இரண்டு படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில், இந்தப்படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தார்கள். ஆனால் இப்போதைக்கு அது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு இறங்கி வந்துள்ளார்கள்.
இந்தப்படம் பல வருடங்களுக்கு முன்பு கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தில் பஹத் பாசில் 20 வயது முதல் 64 வயது வரையிலான விதவிதமான காலகட்டத்தை பிரதிபலிக்கும் தோற்றங்களில் நடித்துள்ளார். அதேபோல படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்துள்ள இளம் நடிகையான நிமிஷா சஜயனும் இதேபோன்ற வயதான கெட்டப்பில் நடித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!