
மலையாள பிக்பாஸ் பெயரில் மோசடி: போலீசில் புகார்
இந்த நிலையில் மலையாள பிக் பாஸ் 4வது சீசனுக்கு பங்கேற்பாளர்கள் தேர்வு நடந்து வருவதாகவும், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களை பற்றிய தகவல்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றும் இணைய தளங்களில் விண்ணப்ப படிவங்கள் வெளியானது.
இது மோசடியானது என்றும், உண்மை என்று நம்பி யாரும் தங்களுடைய விவரங்களை அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும் பிக்பாஸ் 4 சீசன் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்கள் தேர்வை இதுவரை நடத்தவில்லை என்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அறிவித்து உள்ளனர். அதோடு இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!