
சிரஞ்சீவியின் பிறந்தநாளில் புதுப்பட அறிவிப்பு
ஜூன் 07, 2021
Advertisement
தற்போது ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அவருடன் ராம் சரண், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை அடுத்து மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் சிரஞ்சீவி. தெலுங்கிற்காக இந்த படத்தின் கதையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டு படத்திற்கு கிங்மேக்கர் என்று டைட்டில் வைத்துள்ளார் டைரக்டர் மோகன் ராஜா. இப்படியான நிலையில் தற்போது லூசிபர் தெலுங்கு ரீமேக்கான கிங்மேக்கர் படம் சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!