
சிபிஐ-5ஆம் பாகத்துக்கு இசையமைக்கும் ஜேக்ஸ் பிஜாய்
இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இந்தப்படத்தின் இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜேக்ஸ் பிஜாய், “மலையாள ரசிகர்களின் மனம் கவர்ந்த சிபிஐ படத்தின் 5ஆம் பாகத்திற்கு இசையமைப்பதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறன்” என கூறியுள்ளார்..
தமிழில் துருவங்கள் பதினாறு, மாபியா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜேக்ஸ் பிஜாய். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும் படத்தில் இவரது இசையில் இடம்பெற்ற "களக்காத்தா சந்தனமேரா" என்கிற பாடல் ரசிகர்களிடையே வெகு பிரபலமானது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!