
ஒன்றரை கோடி மதிப்பிலான மருத்துவ உதவி வழங்கும் மோகன்லால்
மோகன்லால் தனது பெற்றோர் பெயரில் விஸ்வசாந்தி என்கிற அறக்கட்டளையை துவங்கி அதன்மூலம் கேரளாவில் பலவிதமான உதவிகளை செய்து வருகிறார். இதன்மூலம் கேரளாவில் பல்வேறு இடங்களில் உள்ள 13 மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரண வசதிகள் கூடுதலாக செய்து தரப்பட்டுள்ளன.
மோகன்லால் கூறும்போது, “கேரளா மட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது விஸ்வசாந்தி அறக்கட்டளை மூலமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் உள்ள 13 மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய 200 படுக்கைகள், வெண்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய 10 ஐசியூ படுக்கைகள் மற்றும் போர்ட்டபிள் எக்ஸ்-ரே மிசின் என மூன்று அடுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது” என கூறியுள்ளார்..

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!