
மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 பேருக்கு கொரோனா
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்ட நிலையில் மற்ற மொழி நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள், அந் நிகழ்ச்சியின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாரம்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், மலையாள பிக்பாஸ் தொழில் நுட்பக் கலைஞர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், போதிய தடுப்பு நடவடிக்கைகளோடு, பிக்பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது இனி எந்த படப்பிடிப்பும் 31ந் தேதி வரை நடைபெறாது என்று பெப்சி அறிவித்துள்ள நிலையில் தொடர்ந்து மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறுமா என்று தெரியவில்லை. மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே பாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!