
தேசிய விருதுபெற்ற மலையாள கதாசிரியர் மாடம்பு குஞ்சுக்குட்டன் கொரோனாவால் மரணம்
எண்பது வயதான மாடம்பு குஞ்சுக்குட்டன் கொரோனா பாதிப்பு அறிகுறி காரணமாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று(மே 11) காலை மரணம் அடைந்தார். இவருடன் பணியாற்றிய பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கும் மேலாக மலையாள திரையுலகில் கதாசிரியராகவும், நடிகராகவும் வலம் வந்த இவர் 2000த்தில் வெளியான கருணம் என்கிற படத்தின் சிறந்த திரைக்கதைக்காக தேசிய விருது பெற்றவர்.. மேலும் கேரள அரசின் சாகித்ய அகாடமி விருது உட்பட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல, 2001ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கொடுங்கோல்லூர் தொகுதியில் பிஜேபி சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!