
உயரத்தில் ஏற்றிவிட்ட இயக்குனருக்கு மீண்டும் கைகொடுக்கும் பிஜுமேனன்
அந்த படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனர் ஜிபு ஜேக்கப். அந்த படத்தை தொடர்ந்து அவருக்கு மோகன்லால் நடித்த "முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல்" என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் படம் வெற்றி பெறவில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் ஆத்ய ராத்திரி என்கிற படத்தை தன்னை வைத்து இயக்கும் வாய்ப்பைத் தந்தார் பிஜுமேனன் அந்த படமும் தோல்வியை தழுவியது.
தற்போது கர்ணன் பட நாயகி ரஜிஷா விஜயனை வைத்து "எல்லாம் சரியாகும்" என்கிற படத்தை இயக்கி உள்ளார் ஜிபு ஜேக்கப். இந்த நிலையில் ஜிபு ஜேக்கப்புக்கு கைகொடுத்து தூக்கிவிடும் விதமாக, மீண்டும் அவரது டைரக்ஷனில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் பிஜுமேனன். தற்போது அவர் எடுத்து வரும் பட டைட்டில் பாணியில் சொல்வதென்றால் இனி ஜிபு ஜேக்கப்பிற்கு எல்லாம் சரியாகும் என்று சொல்லலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!