
எடை குறைக்க உதவிய உன்னி முகுந்தனுக்கு அனு சித்திரா நன்றி
இந்தநிலையில் மலையாள சினிமாவின் கொழுக் மொழுக் நடிகையான அனு சித்தாரா, தனது உடல் எடையை குறைக்க ரொம்பவே சிரமப்பட்டு வந்தார். இதற்காக நல்ல டயட்டீஷியன் ஒருவரை தேடிவந்த சமயத்தில் தான், உன்னி முகுந்தனுடன் இணைந்து மேப்படியான் என்கிற படத்தில் நடித்தார். அந்த சமயத்தில் உன்னி முகுந்தனிடம் தனது பிரச்சனையை அவர் சொல்ல, அவருக்கு பெண்களுக்கே உரிய டயட் முறை பற்றி கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.
அவர் கூறிய டயட்டை சரியாக பின்பற்றிய அனு சித்தாரா, தற்போது ஒரே மாதத்தில் சுமார் ஆறு கிலோ எடையை குறைத்து விட்டேன் என கூறியுள்ளதுடன், சிறந்த டயட்டை கூறி வழிகாட்டியதற்காக உன்னி முகுந்தனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!