
ராஜஸ்தானில் மகாவீர்யர் படப்பிடிப்பை முடித்த நிவின்பாலி
இந்தநிலையில் தனக்கு இரண்டு ஹிட் படங்களை கொடுத்து, தனது கேரியர் உயர காரணமான அப்ரிட் ஷைனுக்கு, தான் நடிக்கும் மகாவீர்யர் படத்தின் மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார் நிவின்பாலி. மேலும் இந்தப்படத்தை நிவின்பாலியே தயாரித்தும் உள்ளார். இரண்டு ஹீரோக்கள் கதையாக உருவாகும் இந்தப்படத்தில் ஆசிப் அலி இன்னொரு ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பையும் முடித்து கேரளா திரும்பியுள்ளனர் மகாவீர்யர் படக்குழுவினர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!