
இக்கட்டான சூழலில் வெளியாகும் பிரியா வாரியரின் தெலுங்கு படம்
இந்தப்படம் வரும் ஏப்-23ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை மலைபோல நம்பியுள்ள பிரியா வாரியர், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு பக்காவாக ஒத்துழைப்பு கொடுத்து கலந்துகொண்டு வருகிறார். ஆனால் ஏற்கனவே இதே தேதியில் ரிலீசாக இருந்த விராட பர்வம், தலைவி, எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்கள், கொரோனா இரண்டாவது அலை, லாக் டவுன், தியேட்டர் காட்சிகள் குறைப்பு என பல்வேறு காரணங்களால் ரிலீஸாவதில் இருந்து பின்வாங்கி விட்டன.
ஆனாலும் இஷ்க் பட நிறுவனத்திடம் இருந்து அப்படி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகததால், இந்த வாரம் தென்னிந்திய அளவில் இந்த ஒரு படம் மட்டும் தான் வெளியாகும் என தெரிகிறது. மூன்று தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்தப்படத்தை தயாரித்திருந்தாலும் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தான் இந்தப்படத்தை வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!