
ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு
இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் ஜனதா கேரேஜ் என்கிற படத்தில் இணைந்து வெற்றியை கொடுத்தவர்கள் தான்.. தற்போது சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்தை இயக்கி வரும் கொரட்டாலா சிவா அதை முடித்ததும் ஜூனியர் என்டிஆர் படத்தை துவங்குகிறார்.
கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் இந்த காலகட்டத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பு எப்போது நடைபெறும், படப்பிடிப்பு முடிந்தாலும் எப்போது ரிலீசாகும் என நிச்சயமாக சொல்ல முடியாத சூழ்நிலையில், 2022 ஏப்ரல் 29ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என முன்கூட்டியே ரிலீஸ் தேதியையும் அறிவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது பட தயாரிப்பு நிறுவனம்

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!